வடக்கின் அடுத்த முதல்வர் யார்? இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது!

“வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும்  நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழாவில் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.