வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதுவே தமிழர்களின் பூமி

வடக்கு, கிழக்கு இணைந்த தமது பூர்வீக நிலங்களில், குறிப்பாக ஒரே நாட்டுக்குள் வாழவே தமிழ் மக்கள் விரும்புவதாகவும் அதனை அங்கிகரிக்குமாறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம், நேற்று செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சில அரசியல் தலைவர்கள் புதிய அரசியல் யாப்பை எதிர்ப்பதும், அதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதுமாக இருந்தால் சிங்கள மக்கள் அதனை எஎவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

யுத்தம் நடைபெற்று ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டும், காணாமலும் போயும், எழு ஆண்டுகள் கடந்த நிலையில், ஏன் இந்த அரசியல் யாப்பு பற்றிய விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே தமிழர்களின் பிரச்சினைகளுக்காகவே இந்த புதிய யாப்பு உருவாக்கப்படுகின்றது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு புரிந்துக்கொண்டால் மாத்தரமே இதனை சரிவர நிறைவேற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் என்பதே தமிழர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.