விசா­ரணை ஆரம்­பிக்க முன்­னரே கைதி­க­ளைப் புலி­கள் என்று முத்­திரை குத்­தி­விட்­டனர்

அர­சி­யல் கைதி­கள் வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்­டி­ருப்­போரை அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக குற்­ற­வா­ளி­க­ ளா­கக் காண வேண்­டிய தேவை இருப்­பது போல் தெரி­கி­றது. விசா­ரணை ஆரம்­ப­மாக முன்­னரே ருவான் விஜ­ய­வர்த்­தன உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் சிறைக்­கை­தி­களை விடு­த­லைப்­பு­லி­கள் என முத்­திரை குத்­தி­விட்­டார்.

இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். அர­சி­யல் கைதி­கள் விட­யம் தொடர்­பி­லான கடி­தம் கடந்த 16 ஆம் திக­தி­யன்று ஆங்­கில மொழி­யில் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக அம்­மை­யா­ருக்கு அனுப்­பப்­பட்­டது.

அதற்­குப் பதில் இன்­னும் கிடைக்­க­ வில்லை. அவ்­வாறு அனுப்­பப்­பட்ட கடி­தத்­தின் தமிழ் மொழி­பெ­யர்ப்பு என்று முத­ல­மைச்­சர் அனுப்­பிய கடி­தக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அன்­புள்ள சந்­தி­ரிகா அம்­மை­யார் அவர்­களே, தாங்­கள் எமது நாட்­டில் சமா­தா­னத்­தை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் பெரும் பணியை ஏற்­றி­ருக்­கின்­றீர்­கள். அத­னால் தாங்­கள் அனு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லை­க­ளில் உணவு ஒறுப்­பி­லி­ருக்­கும் சிறை க்­கை­தி­க­ளின் பரி­தா­ப­க­ர­மான நிலையை விரை­வில் கவ­னத்­தில் கொள்­வது பொருத்­த­மா­னதே.

அரசு இந்த மூவ­ரின் வழக்கை வவு­னி­யா­வி­லி­ருந்து அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றி­யது வழக்­கின் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­ப­ளிப்­ப­தற்­கல்ல என்­பது போல் தெரி­கி­றது. சாட்­சி­யா­ளர்­கள் வெளி­நாடு சென்­று­விட்­டார்­கள் என்­றும் அவர்­கள் எங்­கி­ருக்­கின்­றார்­கள் என்­பது தெரி­ய­வில்­லை­யென்­பதே உண்­மை­யென அறிய வரு­கின்­றது.

அவர்­கள் இருக்­கு­மி­டம் தெரிந்­தி­ருந்­தால்க் கூட அரசு அவர்­களை இலங்­கைக்கு கொண்டு வரு­வ­தற்கு எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை எனத் தெரி­கி­றது. ஆகவே பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் பெறப்­பட்ட அவர்­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்கு மூலத்­தின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே அவர்­க­ளைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் காண்­பதே அரச தரப்­பா­ரின் நோக்­க­மெ­னத் தெரி­கி­றது.

நான் உயர் நீதி­மன்­றத்­தில் நீதி­ப­தி­யாக இருக்­கை­யில் ‘நாக­மணி’ வழக்­கில் கொடுத்த தீர்ப்பு எல்­லோ­ரும் அறிந்­ததே. அதனை உதா­ர­ண­மாக வைத்து பல நீதி­மன்­றங்­கள் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பி­ டப்­பட்ட சம்­ப­வம் இடம்­பெற்­றதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வாக இன்­னொரு அனு­ச­ர­ணைச் சாட்­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்­கள்.

அந்த வழக்­கில் தனியே ஒப்­பு­தல் வாக்கு மூலத்­தின் அடிப்­ப­டை­யில் வேறு ஒரு அனு­ச­ர­ணைச் சாட்­சி­ய­மின்றி ஒரு­வ­ரைக் குற்­ற­வா­ளி­யா­கக் காண்­பது சரி­யான தீர்ப்­பாக இருக்க முடி­யாது. உதா­ர­ணத்­திற்கு ‘ஓ’ என்­னும் ஒரு­வரை தான் கொன்­று­விட்­ட­தாக ஒரு­வர் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளித்­துள்ள போது ‘ஓ’ என்­ப­வர் உயி­ரு­டன் இருந்­தால் எப்­ப­டி­யி­ருக்­கும்? மட்­டக்­க­ளப்­பில் ஒரு இரா­ணு­வ­மு­கா­மைத் தாக்­கி­ய­ழித்து விட்­ட­தா­கக் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளிக்­கப்­பட்­டது.

ஆனால் இரா­ணு­வம் அப்­ப­டி­யெ­து­வும் இடம்­பெ­ற­வில்லை என சாட்­சி­யம் அளித்து குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தைப் பொய்­யாக்­கி­யது.சிறைக்­கை­தி­கள் தாங்­கள் விடு­த­லைப்­பு­லி­க­ளு­டன் எந்­த­வி­த­மான தொடர்­பு­க­ளும் அற்­ற­வர்­கள் எனக் கூறி­ய­தாக எனக்கு சொல்­லப்­பட்­டது.

ஆன­ப­டி­யால் அவர்­களை யாரென அடை­யா­ளப்­ப­டுத்­த­முன் நாங்­கள் பொறு­மை­யு­டன் நீதி­மன்ற விசா­ர­ணையை எதிர்­பார்த்­தி­ருத்­தல் வேண்­டும். விசா­ர­ணைக்கு முன்­னரே அவர்­களை ருவான் விஜ­ய­ வர்த்­தன விடு­த­லைப்­பு­லி­கள் என்று குறிப்­பிட்­டமை அவ­ரு­டைய கண்­ணி­ய­மற்ற பொறுப்­பற்­ற­த­னத்­தையே காட்­டு­கி­றது.

எப்­ப­டி­யி­ருப்­பி­னும் சாட்­சி­க­ளின் நன்­மைக்­காக மட்­டும் வழக்­கு­களை ஒரு நீதி­மன்­றி­லி­ருந்து இன்­னொன்­றுக்கு மாற்­று­தல் நியா­ய­மா­ன­தல்ல. சாட்­சி­களை பாது­காப்­பது அர­சின் கடமை. வடக்கு மாகா­ணத்­தில் 150,000 இரா­ணு­வத்­தி­னர் உள்­ள­னர்.

இவ் வழக்­கின் சாட்­சி­களை அவர்­க­ளின் பாது­காப்­பிற்­காக வவு­னி­யா­வி­லி­ருந்து அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­று­வ­தென்­பது வேடிக்­கை­யா­னது. இவ்­வ­ளவு எண்­ணிக்­கை­யான இரா­ணு­வத்­தா­லும் பொலி­ஸா­ரா­லும் இவர்­க­ளுக்­குப் போது­மான பாது­காப்பை அளித்­தி­ருக்க முடி­யும்.

நான் அறிந்த அள­வில் மூன்று சாட்­சி­யா­ளர்­க­ளில் எவ­ரும் பாது­காப்பு வழங்­கும்­படி கேட்­ட­தா­கவோ அல்­லது அவர்­கள் இலங்­கை­யில் இப்­பொ­ழுது இருப்­ப­தா­கவோ தெரி­ய­வில்லை. சாட்­சி­யா­ளர்­கள் சட்­டமா அதி­ப­ரி­ட­மி­ருந்து பாது­காப்­புக் கோரி­யி­ருந்­தால் அப்­ப­டி­யா­கப் பெற்­றுக் கொண்ட ஆவ­ணத்­தின் வகையை சட்­ட­மா­அ­தி­பர் பகி­ரங்­க­மாக வெளி­யி­ட­வேண்­டும்.

ஆகவே வழக்கை அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றி­ய­மை­யா­னது குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் மட்­டும் குற்­ற­வா­ளி­க­ளா­கக் காணும் அர­சி­யல் நோக்­க­மே­யன்றி வேறெ­து­வும் இல்லை என்று தெரி­கி­றது. அனு­ரா­த­புர மேல் நீதி­மன்­றம் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தின் கீழ் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டும் வைத்தே பல­ரைக் குற்­ற­வா­ளி­க­ளா­கக் கண்­டி­ருக்­கி­றது.

உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் கைதி­க­ளின் பரி­தா­ப­க­ர­மான நிலை­யா­னது எந்­த­ள­வுக்கு வடக்கு கிழக்கு மக்­க­ளின் மனங்­க­ளைப் பாதித்­தி­ருக்­கின்­ற­தென்­பதை தாங்­கள் இது­வ­ரை­யில் உணர்ந்­தி­ருப்­பீர்­க­ளென நினைக்­கி­ றேன்.அரச தலை­வ­ரின் யாழ்ப்­பாண பய­ணத்­தின் முதல் நாள் எவ்­வாறு வட­ப­கு­தி­யின் அன்­றாட வாழ்க்கை ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­த­தென்­பதை அறிந்­தி­ருப்­பீர்­க­ளென நினைக்­கி­றேன்.

தாங்­கள் இந்த விட­யத்­தில் இவர்­க­ளின் வழக்­கு­களை கைதி­களை வவு­னி­யா­விற்­குத் திருப்பி அனுப்­பு­வ­தற்கு அல்­லது யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றுக்கு மாற்­று­வ­தற்கு உத­வு­வீர்­க­ளென நம்­பு­கி­றேன்.

இக்­கஷ்­ட­மான கால­கட்­டத்­தில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் கைதி­க­ளின் அவ­ல­நி­லையை உணர்ந்து தாங்­கள் தலை­யி­டு­தல் மூலம் எங்­கள் மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யை­யும் நல்­லெண்­ணத்­தை­யும் கட்­டி­யெ­ழுப்ப உத­வு­வீர்­கள் என நினைக்­கி­றேன் என்­றுள்­ளது.