உரிமைகளைப் பெற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டும்

தெற்­கிலே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்­தி­ருப்­ப­து­போல் தமிழ் மக்­க­ளும் முஸ்­லிம் மக்­க­ளும் தமக்­கான இன, மத உரிமை­களைப் பெறு­வ­தற்­காக இணைய வேண்­டும் என தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சோ. சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் பிள்­ளை­யார் விடு­தி­யில் தக­வல் வழி­காட்டி அமைப்­பின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற அர­சி­யல் கருத்­த­ரங்­கில் கலந்­து­ கொண்டு அர­ச­மைப்­பின் தற்­போ­தைய நில­வ­ரம் தொடர்­பில் கருத்­துத் தெரி­விக்­கும்­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தற்­போ­தைய அர­ச­மைப்பு முன்­மொ­ழி­விலே இணக்­கம் காணப்­பட்ட விட­யங்­க­ளும், இணக்­கம் காணப்­ப­டாத விட­யங்­க­ளும் உண்டு. அனைத்து விட­ய­மும் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டு­விட்­ட­த­னால் நாடா­ளு­மன்­றம் எதற்கு என்­கின்­றார் முன்­னாள் அர­ச­த­லை­வர்.

எமது முத­ல­மைச்­சரோ இந்த யாப்­பினை நான் எதிர்க்­கின்­றேன். இருப்­பி­னும் அதனை முழு­மை­யா­கப் படிக்­க­வில்லை என்­கின்­றார்.

தீர்வு என்­னும் குழந்தை பிறக்க வேண்­டும் என்­ப­தில் எல்­லோ­ரும் ஆர்­வ­மாக உள்­ள­னர் ஆனால் அது என்ன பிள்ளை என்­பதே தற்­போ­துள்ள பிரச்­சி­னை­யா­கும்.

முன்­னைய அரச அமைப்­புக்­கள் சிறு­பான்மை மக்­க­ளின் அபி­லா­சை­களை நிறை­வேற்­ற­வில்லை. அத்­து­டன் அவர்­க­ளின் இன, மத, பேச்சு, காணி உரி­மை­கள் போன்ற பல உரி­மை­கள் மறுக்­கப்­பட்­ட­தன் விளைவே ஆட்சி மாற்­றம்.

ஆனா­லும் இந்த ஆட்­சி­யி­லும் பல விட­யங்­க­ளில் முன்­னேற்­றம் இல்லை. சில சில முன்­னேற்­றம் மட்­டும் உண்டு. இந்த நிலை­யி­லேயே புதிய அர­சி­யல் அமைப்பு முயற்­சி­ யும் இடம்­பெ­று­கின்­றது.

இதே­நே­ரம் முஸ்­லிம் மக்­க­ளின் பெருந்­த­லை­வர் அஸ்­ரப், தமிழ் மக்­கள் இவ்­வ­ளவு இழப்­பை­யும் சுமந்து பெறும் தீர்­வுக்கு நாம் தடை­யாக இருக்க மாட்­டோம் என்­றார். அதே­போல் ரவூவ் ஹக்­கீம் அண்­மை­யில் வடக்கு கிழக்கு இணைய வேண்­டும் என கேட்­கும் உரிமை கூட்­ட­மைப்­புக்கு உண்டு என்­றார்.

எனவே தமிழ், முஸ்­லிம் இணைவு சிறு­பான்மை இனத்­தின் ஒற்­று­மைக்கு அவ­சி­யம்-– என்­றார்.