கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளி­கள் தேர்­த­லுக்­காகக் கூடு­கின்­ற­னர்!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான வேட்பு மனுத் தாக்­கல் இந்த மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஆச­னப் பங்­கீடு தொடர்­பான விடயங்­களை ஆராய்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் நாளை யாழ்ப்­பா­ணத்­தில் கூட­வுள்­ளன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தடை முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

93 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எதிர்­வ­ரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திக­தி­வ­ரை­யும், எஞ்­சிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 18ஆம் திகதி முதல் 21ஆம் திக­தி­வ­ரை­யும் வேட்பு மனுக்­கள் ஏற்­றுக் கொள்­ளப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேட்பு மனுத் தாக்­க­லுக்கு மிகக் குறு­கிய நாள்­களே உள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் ஆச­னப் பங்­கீ­டு­கள் தொடர்­பில் முடி­வெ­டுக்­கப்­ப­டாத நிலை­யில் நாளை அவை கூடு­கின்­றன.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­லும் கட்­சி­க­ளுக்கு எத்­தனை வேட்­பா­ளர்­களை ஒதுக்­கு­வது?, பெண் பிர­நி­தித்­து­வம் என்­பன போன்ற விட­யங்­கள் இந்­தச் சந்­திப்­பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது என்று அறிய முடி­கின்­றது.