திருகோணமலை மாவட்டம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்: துரைரட்னசிங்கம் பா.உ

நாட்டின் முக்கியமான ஒரு இடமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுவதால் அங்கு மேலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் சுத்தமான குடிநீர் இல்லாமல் பொது மக்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேசங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதாகவும், இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.