250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது!! சாள்ஸ் கேள்வி

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். மன்னார் நகரத்தின் பிரதான பஸ் தரிப்பு நிலையம் மற்றும் சந்தை கட்டடத்தொகுதி இரண்டும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இதற்காக ஒதுக்கப்பட்ட 250 மில்லியன் ரூபா நிதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.