வடமாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டை சமர்ப்பித்தார் விக்கி

வடமாகாண சபையின் 2018ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஷ்வரனால் முன்மொழியப்பட்டுள்ளது.

இதன்படி 2018ஆம் நிதி ஆண்டுக்கு 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 111 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று காலை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

வடமாகாண சபை முதலமைச்சர் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவை சமர்ப்பித்து கருத்து தெரிவிக்கும்போது,

வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டு நிதியாண்டின் செலவு செயற்பாடுகளைச் செய்வதற்கும் அந்த நிதியாண்டின் தேவைப்படும் நிதி மாகாண சபை நிதியத்தினால் அல்லது மாகாண சபையினால் அல்லது மாகாண சபைக்குத் தகுதி எனக் கொள்ளக்கூடிய வேறு நிதியத்தினால் அல்லது நிதியங்களினால் முற்பணம் வழங்க வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் மாகாண சபையின் பிரதி நிதியத்திற்கு அப்பணத்தை மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடை நேர் விளைவான விடயங்களை ஏற்பாடு செய்வதற்குமானதொரு நியதிச் சட்டம் வடக்கு மாகாண சபையினால் கீழ் வருமாறு ஆக்கப்படுகின்றது.

இந் நியதிச் சட்டம் 2017ஆம் ஆண்டின் குறிப்பிடப்படப் போகும் இலக்க ஒதுக்கீட்டு நிதியச் சட்டம் எனக் குறிப்பிடப்படும். இரண்டாவது ஏதேனும் நிதித் தொகையொன்றை செலவிடுவதற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

யாதாயினுமொரு சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்நியதிச் சட்டத்தில் 2018 நிதியாண்டு என குறிப்பிடப்படும், 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் முடியும் காலத்திற்கு இடைப்பட்ட காலங்களில் வடக்கு மாகாண சபையின் செலவுகளுக்கு என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் ரூபாவாகும்.

அது மத்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும் உதவிகளினாலும் அத்துடன் மாகாண சபையின் நிதியத்தினால் அல்லது தகுதியெனக் கொள்ளப்படும் வேறொரு நிதியங்களினால் தீர்வைகளினால் இச் சட்டத்தில் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலவு செய்யப்படல் வேண்டும்.

2018ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் யாவும் வடக்கு மாகாண சபையின் அந் நிதியாண்டின் அவ் விடயத்திற்கான பெறுவனவிலிருந்து மாத்திரமே செய்யப்படுதல் வேண்டும் என்பதுடன் குறித்த செலவீனமானது அந்த விடயத்திற்கு எதிரே குறிக்கப்பட்டுள்ள எல்லைகளை மீறாது இருத்தல் வேண்டும்.

இந்நியதிச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ஏதேனும் விடயம் தொடர்பில் 2018ஆம் நிதி ஆண்டில் முடிவில் நிலுவையாகவுள்ள வரவு மீதி சொல்லப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ள அதே தலைப்பில் அதிஉச்ச எல்லையைத் தாண்டக்கூடாது என்பதுடன் குறித்த நிதி ஆண்டின் முடிவில் அவ்விடயத்தின் மொத்தத்தை மீறவும் கூடாது.

இச்சட்டத்தின் முதலாவது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள தலைப்பின் கீழ் ஏதாவது நிகழ்ச்சித்திட்டத்தில் மீண்டெழும் செலவீனங்களின் அட்டவணையின் ஏற்பாடுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பினும் அது செலவிடப்படாதென்றும், அல்லது எதிர்காலத்தில் செலவு செய்யப்படாது எனக் கருதப்படும் பணத் தொகை அந் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலதனச் செலவின் தலைப்பின் கீழ் வேறேதாவது நிகழ்ச்சித்திட்டத்தின் மீண்டெழும் செலவினத்திற்கோ மூலதனச் செலவிற்கோ ஒதுக்கீடு செய்வதற்கு பிரதம செயலாளரின் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட வேறொருவரின் உத்தரவின் பிரகாரம் மாற்றம் செய்யலாம்.

மூலதனச் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையினை அட்டவணை ஒன்றில் காட்டப்பட்டுள்ளவாறு மாற்றுவதற்கு மாகாணசபையின் அதிகாரம் பெறப்படவேண்டும்.

அதிகாரமளிக்கப்பட்ட செலவுகளைச்செய்வதற்கு வரிகளிலிருந்து வேறு ஊகங்களிலிருந்தும் பெறுகைகள் எதிர்பார்க்கப்பட்ட பணத்தொகைகளை விட குறையலாம் என அல்லது ஏதாவதொரு விடயங்களுக்கு ஆரம்பத்தில் ஒதுக்கிய பணம் மேலும் தேவைப்படமாட்டாது என முதலமைச்சர் திருப்தியடையும் நிலையில் மாகாண நிதியத்தில் அல்லது மாகாண சபையின் அல்லது, மாகாண சபைக்குத் தகுதி எனப்படும் வேறொரு நிதியத்தில் அல்லது நிதியங்களிலிருந்து அவரால் வழங்கப்பட்ட ஆணைப் பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் பணத்தொகைகளை விட குறையலாம் என அல்லது ஏதாவதொரு விடயங்களுக்கு ஆரம்பத்தில் ஒதுக்கிய பணம் மேலும் தேவைப்பட மாட்டாது என முதலமைச்சர் திருப்தியடையும் நிலையில், மாகாண நிதியத்தில் அல்லது மாகாண சபையின் அல்லது மாகாண சபைக்குத் தகுதி எனப்படும் வேறொரு நிதியத்தில் அல்லது நிதியங்களிலிருந்து அவரால் வழங்கப்பட்ட ஆணைப் பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் செலவு செய்வதற்கு முன்னர் வழங்கப்பட்ட பணம் ஏதேனும் பகுதியினை அதிகாரமளிக்கப்பட்டஏதேனும் செலவீனத்தை எதிர்கொள்வதற்காக வேறுறொருவக்கு முதலமைச்சரின் அனுமதியுடன் பிரதம செயலருக்கு முடியுமாக வேண்டும்.

முதலமைச்சரின் 2019 ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிஅல்லது முன்னர் உத்தரவொன்றின் மேல் இச் சட்டத்தின் 2ஆவது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ஏதேனும் அதி உயர் எல்லைகளுள் எதனையும் இச் சட்டத்தின் இரண்டாவதுஅட்டவணையில் காட்டப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றவோ அல்லது திருத்தவோ முடியும்.

வடக்கு மாகாண சபையினால் ஏதேனும் பொருத்தமான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் அச்சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் தோதான நிரல்களுக்கு ஏதேனும் செயற்பாட்டைச் செயற்படுத்துவதன் மூலமோ அத்துடன் அத்தகைய விடயங்கள் தொடர்பான எல்லா அதி உயர்எல்லைகளையும் அல்லது அவற்றின் ஏதேனும் ஒன்றையும் அத்தகைய விடயங்கள் தொடர்பான ஆகக்குறைந்த எல்லைகளையும் ஏற்பாடு செய்து திருத்தம் செய்யலாம் பிரதிப் பிரதம செயலாளர் நிதி அலுவலகத்தின் செலவில் நிதிமுகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கருத்திட்டத்தின்கீழ் குறித்துக் காட்டப்படும் செலவீனங்கள் பிரதம செயலாளரினால் முதலாவது அட்டவணையில்எந்தவொரு செலவீனத்திற்கும் மாற்றமுடியும்.

எவ்வாறாயினும் குறித்த பரிமாற்றம் குறை நிரப்பு மதிப்பீடு ஒன்றின் மூலம் மாகாண சபையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்நியதிச்சட்டத்தின் கீழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி வாசகங்களுக்கிடையே ஏதேனும் வேறுபாடுகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் தமிழ் மொழியே மேலோங்கி நிற்கும் என முன்மொழிந்தார்.

இப்பாதீட்டுக்கான விவாதங்கள் எதிர்வரும் 12ஆம் 13ஆம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.