கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் வெளியிடப்பட்டது!! ரெலோ, புளொட் கட்சிகளின் நிலை..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும், சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும். வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு நல்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

மாவை சேனாதிராஜா (இ.த.அ.க ) செல்வம் அடைக்கலநாதன் (டெலோ) தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிப்பிரதிநிதிகளோடு இன்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது’ எனக் குறித்த அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.