தமிழ் தலைமைகள் பிரிந்து நிற்பது எதிரிகளுக்கு செங்கம்பளம் விரிப்பதாக அமைந்துவிடும்

தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் தலைமைகள் பிரிந்து நிற்பது எதிரிகளுக்கு செங்கம்பளம் விரிப்பதாக அமைந்துவிடும் எனவும் அதற்கு தமிழ் மக்கள் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ள கம்பவாரிதி இ. ஜெயராஜ், புதிய அரசியல் நாகரீகத்துடன் புதிய தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை  தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்சியில் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் தலைமைகள் தமிழ் மக்களிடையே உருவாக வேண்டும், அவற்றுக்கிடையிலான அரசியல் விமர்சனங்கள் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்றபோதிலும் தற்போதைய சூழலில் கூட்டமைப்பு பிளவுபடுகின்றமை தமிழ் மக்களுக்கு பின்னடைவுகளை  ஏற்படுத்திவிடும் என தெரிவித்துள்ளார்.

அதைவிட, மாற்றுத் தலைமை என்று கூறுபவர்கள் யாருமே தாங்கள் சாதிக்கும் வல்லமை பெற்றவர்களாக தம்மை நிரூபித்தவர்களாக இல்லை எனவும் அனைவரும் ஒரு குளத்தில் ஊறியவர்களாகவே இருப்பதாக தெரிவித்துள்ள கம்பவாரிதி, சமூக சிந்தனையும் ஆற்றலும் உள்ள புதிய தலைமைகள் உருவாக வேண்டும் எனவும் வெறுமனவே உணர்ச்சிகளின் பின்னால் செல்லாது அவ்வாறானவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.