விடுதலைப்புலிகள் ஒழுங்காகவே வைத்திருந்தனர்! சிறீதரன் எம்.பி சபையில் ஆவேசம்

வடக்கில் விடுதலைப்புலிகள் வீதிகளை ஒழுங்காக வைத்திருந்தனர். எனினும், தற்போது வடக்கின் வீதிக் கட்டமைப்பு மிகவும் மோசமடைந்து காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “”வடக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நடக்கின்றன. அங்கு படையினர் சலூன்களை நடத்துகின்றனர். சாப்பாட்டுக் கடைகளை நடத்துகின்றனர்.

வடக்கு மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தினருக்கு அடிமைப்பட்டவர்களாகவே வாழ்கின்றனர். இதற்கு எப்போது முடிவுகட்டப்படும்? இராணுவத்தின் பிடியில் இருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வாருங்கள்.

படையினர் பல ஏக்கர் கணக்கில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆகையால் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிடிக்குள் அப்பகுதி மக்களும் அகப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகளிக் காலத்தில் வடக்கில் வீதிகள் ஒழுங்காக காணப்பட்டன. ஆனால் தற்போது வடக்கின் வீதிக் கட்டமைப்பு மிகவும் மோசமடைந்து காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.