இலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான்! சிங்­கலே என்­பது தவ­றா­னது: புரியவைக்கும் விக்கினேஸ்வரன்

இலங்­கை­யின் மூலப் பெயர் ‘சிங்­கலே’ என்­பது தவ­றா­னது. ஈழம் என்­ப­து­தான் மூலப் பெய­ரா­கும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

மகிந்த ஆட்­சிக் காலத்­தில் பிரதி அமைச்­ச­ராக இருந்த றியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்த கருத்­துக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே, வடக்கு முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்­னன் என்­பதை சரத் வீர­சே­கர ஏற்­றுக் கொள்­ள­ வில்லை. அந்த மன்­னன் சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் வாழ்ந்த மன்­னன். ஆகவே அவர் எவ்­வாறு ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க முடி­யும்? சிங்­கள மொழி­யா­னது கிட்­டத்­தட்ட கி.பி 6ஆவது அல்­லது 7ஆவது நூற்­றாண்­டின் பின்­னர் மட்­டுமே தோற்­றம் பெற்­றது.

சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் நாட்டை ஆட்சி செய்த மன்­னனை சிங்­க­ள­வர் எனக் கூறு­வது முட்­டாள்­த­ன­மா­னது. சிங்­கள மொழி தோன்­றி­ய­தன் பின்­னர் எழு­தப்­பட்ட நூல்­க­ளில் எமது நிலங்­கள் தொடர்­பாக அவர்­க­ளுக்கு விருப்­ப­மான கருத்­துக்­கள் எழு­தப்­பட்­டி­ருக்க­லாம்.

மேலும், இந்த நாட்­டின் மூலப்­பெ­யர் ‘சிங்­கலே’ என்று றியர் அட்­மி­ரல் வீர­சே­கர குறிப்­பிட்­டி­ருந்­தார். இது பொய்­யா­னது. ஈழம் என்­பதே மூலப் பெய­ரா­கும். ஹெல என்­பது ஈழம் என்­ப­தன் பாளி மொழிச் சொல்­லா­கும். சிங்­கலே என்பது கல­வைச் சொல்­லா­கும். இது தொடர்­பாக பார­பட்­ச­மற்ற பன்­னாட்டு வர­லாற்று ஆய்­வா­ளர்­கள், போலி வர­லாற்­றாய்­வா­ளர்­க­ளு­டன் விவா­தம் செய்து உண்­மை­யைக் கண்­ட­றியவேண்­டும்.

இத்­த­கைய போலி வர­லாற்று ஆய்­வா­ளர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட போலி வர­லாற்­றுப் பதி­வு­களை அழிப்­ப­தற்கு ஒரு மணித்­தி­யா­லம் கூடத் தேவை­யில்லை. இத்­த­கைய கற்­ப­னை­யான கருத் துக்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு முன்­னாள் பௌத்த திரா­வி­டன் ஒரு­வனை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கும் – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.