எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ

எமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடன் செயற்படுவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இரணைமாதா நகர் பொதுநோக்கு மண்டபத்தில் இன்றைய தினம்(10) மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

அச்சசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நாம் பதவிகளுக்காகவோ சலுகைகளுக்காகவோ ஓற்றுமையின்றி செயற்படமுடியாது.

நாம் அனைவரும் ஒரேகொள்கைக்காக பயணிக்கவேண்டும். கொள்கைகளே முக்கியமே தவிர பதவிகள் முக்கியமானது அல்ல எனவும் கூறியுள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.
அகிம்சை வழியலும் பின்னர் ஆயுதவழியிலும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆயுத போராட்டம் மௌனித்ததன் பின்னரும் போராடிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் எங்களுடைய போராட்ட வாழ்வுகள் முடியவில்லை.

இன விடுதலை வேண்டியும் மறுபுறத்திலே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களுடைய உறவுகளுக்காக போராடுகின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இச்சந்திப்பிலே தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் முழங்காவில் பிரதேச அமைப்பாளர் தனா பூநகரி பிரதேச தமிழரசுக்கட்சியின் தலைவர் குவேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (5) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (6) 625.0.560.320.160.600.053.800.700.160.90 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (4)