நேர்மையான அரசியல் தீர்வு கிடைக்காவிடின் விளைவுகள் கடுமையாக இருக்கும்: சிறீதரன் பா.உ

தமிழர்கள் இதுவரை கொடுத்த விட்டுக்கொடுப்புக்களுக்கு ஏற்ற நேர்மையான அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தரப்பு விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

நேற்று இடம்பெற்ற அரச தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர்கள் இந்த நாட்டிலே 70ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான அரசியல் தீர்வு வேண்டி போராடிக்கொண்டிருக்கிறார்கள் தந்தை செல்வா அகிம்சை வழியிலும் தலைவர் பிரபாகரன் ஆயத வழியிலும் போராடியிருக்கிறார்கள்.

தந்தை செல்வாவிற்கு பின்னர் தந்தை செல்வாவே எதிர்பார்த்திருக்க முடியாத வகையில் எமது போராட்ட வடிவத்தை மாற்றி 30 ஆண்டுகளாக எம் இனத்தின் பேரம்பேசும் சக்தியாக தலைவர் பிரபாகரன் தலமையில் விடுதலைப்புலிகள் மாறியிருந்தார்கள். ஆயுத போராட்டம் மௌனித்த பின்னர் எமது கட்சி அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கிறது.

நேர்மையான தீர்வு கிடைக்காவிடின் எமது அடுத்த சந்ததி எவ்வாறு போராடும் என்பதைக்கூற முடியாது. நாம் தொடர்ந்தும் எந்த வழியில் போராட வேண்டும் என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் தீர்வுத்திட்டமே தீர்மானிக்கும் என்றார்.