அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான இரு பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திற்கு தேர்தல் முகவராக நியமிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அரியநாயகம் சரியான தேர்தல் ஒழுங்கு முறைகளை பின்பற்றாமையினாலேயே இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கல்முனை நகரசபை, நாவிதன்வெளி பிரதேசசபை, கரைதீவு பிரதேசசபை ஆகியவற்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் திருக்கோயில் பிரதேசசபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு எதிர்வரும் 21ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.