கூட்­ட­மைப்­பின் உறுதியான வெற்­றியை யாரா­லும் அசைக்க முடி­யாது!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வடக்கு – கிழக்­கில் தர­மான – பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கள­மி­றக்­கும். கூட்­ட­மைப்­பின் வெற்­றியை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

“கூட்­ட­மைப்­பின் மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளும் தற்­போது வேட்­பா­ளர் தெரி­வில் ஈடு­பட்­டுள்­ளன. வேட்­பா­ளர்­கள் தெரி­வில் இளை­யோ­ருக்­கும், பெண்­க­ளுக்­கும் முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­டும். வடக்­கில் மட்­டு­மல்ல கிழக்­கி­லும் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ளர் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­கள் வேட்­பா­ளர்­கள் இணைத்­துக் கொள்­ளப்­ப­டு­வார்­கள். வடக்­கு-­கி­ழக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எவ­ரா­லும் அசைக்­க­மு­டி­யாது. கூட்­ட­மைப்­பின் வெற்றி உறுதி” என­வும் அவர் மேலும் தெரி­வித்­தார்.