கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அதன் பலனை விரைவில் அனுபவிப்பார்கள்!

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட சிலரே தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக சிலர் தப்புக்கணக்கு போடுகின்றனர். கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தே சிலர் வாக்கு வங்கியை அதிகரித்துக்கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சி சார்பில் மட்டக்களப்பில் அப்பில் சின்னத்தில் போட்டியிட்ட ஒருவர் 1600 வாக்குகளை பெற்றிருந்தார். பின்னர் அதே உறுப்பினர் கூட்டமைப்பில் இணைந்தபோது 29000 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேர்மையாக பயணிக்கின்றது. கூட்டமைப்பை யாரும் வீழ்த்திவிடமுடியாது. கூட்டமைப்பில் இருந்து பிரிந்துசென்றவர்கள் அதன் பலனை விரைவில் உணர்ந்துகொள்வார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.