கிளிநொச்சியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மூன்று பிரதேசசபைகளுக்கான உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழுக்கள் தமக்கான கட்டுப்பணத்தை கடந்த வாரம் முதல் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச சபை, பூநகரிப்பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப்பிரதேச சபை, ஆகிய மூன்று சபைகளுக்கும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத்தெரிவு செய்து அதற்கான கட்டுப்பணத்தினை கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் செலுத்திவருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்படி மூன்று பிரதேசசபைகளிலும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத் தேர்தல் செயலகத்தில் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

இதன் போது மூன்று சபைகளிலும் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (4) 625.0.560.320.160.600.053.800.700.160.90