த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது!: சி.சிறீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உருவாக்கத்திற்கு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஆற்றிய பங்கு மகத்தானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் காரியாலயமான அறிவகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே எமது தலைவன் பிரபாகரன் செய்த மிகப்பெரும் சாதனைகளுக்கு எல்லாம் உந்துசக்தியாக, ஆலோசகராக விடுதலை இயக்கத்தினுடையதும் எமது இனத்தினுடையதுமான மூத்த அரசியல் போராளியாக, உலகே வியக்கும் இராஜதந்திரியாக, எம்மை வழிநடத்தியவரே தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் ஆவார்.

அரசியல் ரீதியாக எமக்கு விரிக்கப்பட்ட வலைகளை எல்லாம் அவற்றை எமக்குச் சாதகமாக்கி அந்த வலையை விரித்தவர்களையே வீழ்த்திய உலகின் மிகப்பெரும் இராஜதந்திரி.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளை அரசியல் ரீதியாக வளர்த்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தமிழருக்குள்ளும் அரசியலை வளர்த்த எம் அரசியல் தலைமகன்.

இன்றும் தமிழ் மக்களின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் பாலா அண்ணா ஆற்றியபங்கு அளப்பரியது.

தமிழர்களின் ஜனநாயக பலத்தை உலகிற்கு காட்ட முனைந்த தலைவரின் எண்ணத்திற்கு அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க உந்துசக்தியாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

antan001-300x167 antan003-300x167 antan004-300x167 antan005-300x167 antan006-300x167 antan008-300x167 shri002-3-300x167