மட்டக்களப்பில் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது த.தே.கூட்டமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. மாநகரசபை உள்ளிட்ட ஏனைய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் செலுத்தியுள்ளது.

மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை, கோறளைப்பற்று வடக்குப் பிரதேசசபை, கோறளைப்பற்று மேற்குப் பிரதேசசபை,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை, போரதீவுப்பற்று பிரதேசசபை, மண்முனை தென்மேற்குப் பிரதேசசபை ஆகிய சபைகளுக்கே இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன், சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா, மார்க்கண்டு நடராசா உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.