யாழில் கட்டுப்பணத்தை கட்டியது த.தே.கூட்டமைப்பு

யாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது.

சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தநிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணமே இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலி.வடக்கு முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் இன்று யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளரிடம் கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றனர்.