நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்! சம்பந்தன் உறுதி

நாங்கள் இந்தப் பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்வோம் என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஆசனப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்கள், குழப்பங்கள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

அரசியல் கூட்டணிகளில், குறிப்பாக வேட்புமனுக்களை தயாரிக்கும் போது, இதுபோன்ற விவகாரங்கள் அசாதாரணமானவை அல்ல.

இந்தப் பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்வோம். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, புளொட் தலைவர் சித்தார்த்தனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், வேட்புமனுக்கள் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியுடன் கருத்து வேறுபாடுகள் இருப்பதை உறுதி செய்துள்ள போதிலும், தனி வழியில் செல்வதற்கு முடிவுகள் எதையும் எடுக்கவில்லை.

தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி, இந்தப் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனவே அரசியல் கூட்டணிகளில், குறிப்பாக வேட்புமனுக்களை தயாரிக்கும் போது, இதுபோன்ற விவகாரங்கள் அசாதாரணமானவை அல்ல. நாங்கள் இவற்றைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றார்.