சம்பந்தனின் உடல் நலக்குறைவுக்கு இது தான் காரணம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தன் உடல் நலக்குறைவினால் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று முந்தினம் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்கிறது கூட்டமைப்பு தகவல்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சம்பந்தனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க் கட்சித் தலைவரின் உடல் நலக்குறைவுக்கு அழுத்தங்கள் சார்ந்த பிரச்சினையே காரணம் என சொல்லப்படுகிறது. எனினும் மருத்துவமனையில் இருந்து உத்தியோகபூர்வமான தகவல்களோ அல்லது கூட்டமைப்பினரின் அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும், அவரின் உடல் நிலையில் இந்தளவிற்கு அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து சில தரப்பினர் குறிப்பிடுகையில், அண்மையில் அரசியல் போக்கும் ஒரு காரணம் என்கிறார்கள்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதில் தமிழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட ஆசனப் பங்கீடுகள் தொடர்பான சிக்கல்களும், கட்சிகளுக்கிடையே இருந்த பிளவுகளும் காரணமாக இருக்கலாம் என்கின்றன அந்தத் தகவல்கள்.

ஆசனப் பங்கீட்டினால் கட்சிகள் பிளவடைவது குறித்தும், ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகளும் பெரும் பிரச்சினையாக இருந்தது.

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பாக இரவு பகலாக அவர் கடுமையான பணிகளை செய்ததாகவும், இதுவும் அவரின் உடல் நலனில் சீரின்மை ஏற்படக் காரணமா மாறியிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகள் தான் அவருக்கான அழுத்தமாக மாறியிருக்கிறது என்கிறார்கள் தகவலறிந்த தரப்பினர். எதுவாயினும் அவரின் உடல் நலம் முன்னேறிவருது குறித்ததான தகவல்கள் நிம்மதியளிப்பதாக கூட்டமைப்பினை சார்ந்தோர் குறிப்பிடுகிறார்கள்.