தமிழரசுக் கட்சியில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி!

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி. கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் தமிழரசுக் கட்சியினால் ஒதுக்கப்பட்ட ஆசனப் பங்கீட்டினூடாக களமிறங்குகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்பொழுது தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஆகிய கட்சிகள் தான் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. அதே போன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக் கட்சி ஒதுக்கிய ஆசனப் பங்கீட்டினூடாக ஜனநாயகப் போராளிகள் கட்சியை சார்ந்த வேட்பாளர்களும் தேர்தலில் களமிறங்குகிறார்கள் என்றார்.