திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு இன்றைய தினம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.

திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் குறித்த வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் திருகோணமலை நகர சபையின் வேட்பாளர்கள், பிரதேச வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலை நகரசபை, கிண்ணியா நகரசபை, மெறவேவ பிரதேசசபை, குச்சவெளி பிரதேசசபை, கந்தளாய் பிரதேசசபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு இதன்போது வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.