விரைவில் வீடு திரும்புகிறார் சம்பந்தன்

உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் நிலை தேறி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், எதிர்க்கட்சித் தலைவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் உடல் நலம் தேறியுள்ளதால் விரைவில் வீடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.