புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களுக்கும் த.தே.கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

காலை 11 மணி தொடக்கம் 1 மணி வரை சுமார் 2 மணித்தியாலம் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இவர்கள் சமூகப்பணியிலும், மாவீரர் துயிலும் இல்லங்களை சுத்தம் செய்வதிலும் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், எதிர்காலத்தில் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களில் கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக தமிழ் மக்களை குழப்பும் வகையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், இந்த சந்திப்பு ஓர் ஆக்கபூர்வமான ஒன்றாக அமைந்ததாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.700.160.90