விடுதலை புலிகளின் ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு: சுமந்திரன் திட்டவட்டம்!

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கல் பணிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இதனை யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து குறிப்பிட்டார்.