தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கூட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி மாலை 02.30 மணியளவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நேற்று யாழ்ப்பாணம், இன்று வவுனியா மற்றும் மன்னார், நாளை கிளிநொச்சி மற்றும் திருகோணமலை, ஜனவரி முதலாம் திகதி அம்பாறை மற்றும் மட்டக்களப்பு என அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.