த.தே.கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார முன்னெடுப்பு

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் த.தே.கூட்டமைப்பின் 12ஆம் தேர்தல் வட்டாரத்திற்கான வேட்பாளர்கள் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை – அம்மன்கோவில் வீதியில் வசிக்கும் மக்களுடனான சந்திப்பும், தேர்தல் பரப்புரையும் நேற்று மாலை இடம்பெற்றது.

குறித்த மக்கள் சந்திப்பினை கல்முனை அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் திரு.ரஞ்சன் ஏற்பாடு செய்திருந்தார்.

கல்முனை முன்னாள் மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கென்றி மகேந்தரன் தெரிவிக்கையில்,

தமிழரின் பூர்வீக பிரதேசமான கல்முனையை தமிழரிடம் இருந்து பிரிப்பதற்கான சூழ்ச்சிகள் நடைபெறும் நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் தமிழருக்கான ஆசனங்களை எந்த வகையிலும் இழக்காமல் பெற வேண்டியது அவசியமாகும்.

தமிழரின் வாக்குகள் பிரிபடாமல் எமது வாக்குகளை வீட்டு சின்னத்திற்கு ஒருமித்து வழங்கவேண்டும். குறிப்பாக தமிழ் முஸ்லிம் வேட்பாளர்கள் உள்ள கல்முனை 12ஆம் வட்டாரத்தில் எமது வாக்குகளை சிதறடிக்க பல்வேறு சதிகள் நடைபெறுகிறதாகவும் இதன் போது குறிப்பிட்டார்.

மக்கள் இதில் விழிப்பாக இருந்து எமது நிலத்தில் எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற எல்லோரும் ஒன்றிணைந்து ஒரே கட்சிக்கு வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.700.160.90