குட்டித் தேர்தலில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த சிலர் முயற்சி: சித்தார்த்தன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் சிலர் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று அரசமைப்பு முயற்சியில் அல்லது எந்த விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதன் தனியான ஒரு பங்கை வகித்து வருகின்றது என்றும் கூறியுள்ளார்.

ஆகவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் சிலர் தேர்தலைப் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் நிச்சயமாக தனிப் பெரும் கட்சியாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஏனைய கட்சிகள் இந்த வாக்குகளைச் சிதறடித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் குலைப்பதால் அவர்கள் அடையப் போகும் பலன் ஒன்றுமில்லை என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.