2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான துவாரகனை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நேரில் சந்தித்துள்ளார்.
புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவனின் வீட்டிற்குச் சென்ற சித்தார்த்தன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் வடமாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபனும் கலந்து கொண்டார்.
அகில இலங்கை ரீதியில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் யாழ்.வடமராட்சி ஹாட்லி கல்லூரி மாணவன் துவாரகன் முதலிடம் பெற்றிருந்தார்.
இவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிவதுடன், வடமாகாண ஆளுநர், மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.