தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது? பதிலளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று சிலர் கேள்வி எழுப்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.

தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நூறு வீத உரிமை கூட்டமைப்புக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகளவான இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று சிலர் கேட்கின்றனர். நாங்கள் யாரையும் கடத்தவும் இல்லை, கப்பம் பெறவும் இல்லை.

இளைஞர்கள் சிறையில் அடைபடுவதற்கு சூத்திரதாரியாக இருக்கவும் இல்லை. ஆனால் இவற்றினை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே போராடிவருகின்றோம் என்றும் அவர் பதில் வழங்கியுள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையுடன் பயனிப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.