தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகபடியான அபிவிருத்தி செய்துள்ளது: எஸ்.வியாளேந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த அபிவிருத்திகளை விட வேறு எந்த கட்சியாவது இந்த மாவட்டத்தில் அதிகபடியான அபிவிருத்தி செய்துள்ளது என்பதை நிரூபித்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படுகின்ற இரு முக்கிய சவால்கள் இருக்கின்றன. இப்பொழுது வேட்புமனு தாக்கல் முடிந்து ஒவ்வொரு வட்டாரமாக களமிறங்கி கடமைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தருணத்தில் இரண்டு விதமான எதிர் பிரச்சாரத்திற்கு வேட்பாளர்கள் முகம் கொடுக்கின்றீர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்தி விடயத்தில் உதவாத கட்சி, அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையான கட்சி.

இதில் உள்ள உண்மை என்ன, ஜனநாயகம் என்ன என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக தீர்வுத்திட்டம் நோக்கிய பயணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களை அடகுவைத்து விட்டது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (3)

625.0.560.320.160.600.053.800.700.160.90

mavi003

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி போன்று செயற்படுகின்றது. இடைக்கால அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றுமுழுதாக ஏற்றுக்கொண்டுவிட்டது என்ற பிரச்சாரத்தையும் நாங்கள் களத்தில் சந்திக்கின்றோம்.

நாங்கள் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியின் பங்காளர்களாக இரண்டரை வருடங்கள் இருந்திருக்கின்றோம். அதேவேளை ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு சுதந்திரமானதொரு சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் கடந்திருக்கின்றோம்.

தேசிய ஆட்சியில் 2 வருடத்தையும் மாகாண ஆட்சியில் இரண்டு வருடத்தையும் நிறைவு செய்திருக்கின்றோம். இந்த இரண்டு வருட காலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்ப் பிரதேசங்களில் செய்த அபிவிருத்திகளை ஒவ்வொரு வேட்பாளரும் அறிந்துகொள்ள வேண்டும்.

நான் சவாலுக்கு சொல்லமுடியும். நாங்கள் களமிறங்கி வேலை செய்யும் கிராமங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்த வேலைத்திட்டங்களை விட அல்லது அபிவிருத்தியை விட ஒரு படி ஏனைய கட்சிகள் செய்திருப்பதை நிரூபித்தால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை துறப்பதற்கு தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.