இது சிங்கள தேசம் அல்ல! தமிழ் மக்களுக்கும் ஒரு தாயகம் இங்குண்டு: எம்.ஏ.சுமத்திரன்

தமிழ் மக்களின் அடிப்படைகள் நிறைவேற வேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தங்கள் அடிப்படைகளை விட்டுக்கொடுக்கவில்லை என்பதற்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தான் ஆதாரம்.

அது நிறைவேறவேண்டுமானால் இந்த நாட்டில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ வேண்டும்.

இலங்கை, சிங்களவர்கள் மட்டும் இருக்கின்ற தேசம் அல்ல. தமிழ் மக்களுக்கும் ஒரு தேசம் இருக்கின்றது. தாயகம் இருக்கின்றது.

அவர்கள் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரே நாட்டிலே வாழ்வதற்கு இணங்கி வந்திருக்கிறார்கள் என்று சரித்திரம் எழுதப்பட வேண்டும்.

இந்த முயற்சி பலிக்க வேண்டும். இந்த முயற்சி பலிப்பதற்கு தமிழ் மக்களுடைய ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்னறது என குறிப்பிட்டுள்ளார்.