உள்ளூராட்சிதேர்தல் அபிவிருத்திக்கு அப்பால் தமிழர் பலத்தையும் காட்டவேண்டும் -பா.அரியநேத்திரன்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அபிவிருத்தி என்பது உண்மை ஆனால் அதன் மூலமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் கொடுக்கும் செய்தி என்பது உலகத்திற்கும் போய் சேரவேண்டும் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி தலைவருமான பாக்கியசெல்வம்அரியநேத்திரன்.

ஏறாவூர்பற்று பிரதேசசபை பங்குடாவெளி 14,ம் வட்டாரப்பிரிவில் இலுப்படிச்சேனை சந்தியில் வேட்பாளர் சின்னத்துரை சர்வானந்தா அவர்கள ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகம் கடந்த 02/01/2018, செவ்வாய்கிழமை திறந்துவைக்கப்பட்டு பிரசாரக்கூட்டம் வேட்பாளர் சின்னத்துரை சர்வானந்தா தலைமையில் இடம்பெற்றது அதில் அதிதியாக கலந்து உரையாற்றிய பா.அரியநேத்திரன் மேலும் கூறுகையில்.

எதிர்வரும் பெப்ரவரி 10,ம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிசபைத்தேர்தல மிகமுக்கியம் வாய்ந்த தேர்தலாகும் பிரதேச அபிவிருத்தி ஊர் அபிவிருத்தி சுற்றாடலை பேணுதல் சுகாதாரவசதிகளை ஏற்படுத்துதல்

என பல பணிகளை முன்எடுப்பதற்கான ஒரு அருமையான சபையாக இந்த தேர்தல் பார்க்கப்பட்டாலும் எம்மை பொறுத்தவரை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த தேர்தல் மூலமாக மக்கள் வழங்கும் ஆணை என்ன என்பதை சர்வதேசம் நிட்சயமாக பார்கப்போகின்றது.

ஏனெனில் கடந்த 2009, மே, 19 விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பானது மக்கள் ஆணையை பல தேர்தல்கள் மூலம் அது கிழக்குமாகாணதேர்தலாக இருக்கலாம்,வடமாகாணதேர்தலாக இருக்கலாம், இரண்டுதடவை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களாக இருக்கலாம், ஜனாதிபதி தேர்தலாக்கூட இருக்கலாம் அனைத்து தேர்தல்களிலும் வடகிழக்கு மக்களின் தலைமை தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதை நிருபித்து காட்டியுள்ளனர்.

அதனால் தான் இன்று சர்வதேச அரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கு மக்களின் தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது கடந்த 2015,ம் ஆண்டுக்குப்பின் வடகிழக்கு மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்கும் முயற்சிகள் பாராளுமன்றம் ஊடாக எடுக்கப்பட்டு தற்போது இடைக்கால அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டநிலையில்

இந்த உள்ளூராட்சிசபை தேர்தலுக்கு நாம் முகம்கொடுக்கின்றோம் இந்த உள்ளூராட்சி தேர்தலில் வடகிழக்கில் போட்டியிடும் தமிழ் அரசியல் கட்சிகள் இந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்க மக்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்வைக்கின்றனர் சிலர் இலங்கை தமிழரசு கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை முன்எடுக்கின்றனர்.

உண்மையில் அவர்கள் தோற்கடிப்பதும் நிராகரிப்பதை மட்டுமே சொல்கின்றனர் அதற்கு மாற்றீடான திட்டம் எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை அவ்வாறான நிலையில்

இந்த தேர்தலில் வடகிழக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து எமக்கு அரசியல் தீர்வு மிகவும் அவசியம் என்பதை மீண்டும் நிருபிக்கும் மக்கள் ஆணையாக நாம் இந்ததேர்தலை பயன்படுத்தவேண்டும்.

வடகிழக்கில் இந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல்களில் வெவ்வேறு இடங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டி இடுகின்றன அத்தனை கட்சிகளுக்கும் சுயேட்சைக்குழுக்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்னவென்றால் அனைத்து கட்சிகளும் தமிழ்தேசியகூட்டமைப்பை மட்டுமே விரல் நீட்டி குற்றம் சுமத்தி விமர்சனம் செய்து தமது அநாகரீகமான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

இதில் இருந்து ஒன்றை மக்கள் விழங்கிக்கொள்ள வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வடகிழக்கு மக்களில் இருந்து தோற்கடிக்க முடியாது அது ஒரு பலமான சக்தி என்பதை அனைவருமே விழங்கியதன் காரணமாகவே எமக்கு மட்டும் எல்லாகட்சிகளும் சேர்ந்து பிரசாரங்களை முன்எடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை ஏனய மாவட்டங்களைவிடவும் காணி அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்கள் என்பன எல்லை கிராமங்களில் கூடுதலாக இடம்பெறுவதை காணலாம்.

உள்ளூராட்சிசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிகாரத்தின் கீழ் வரும்போது அந்தந்த பிரதேசபை உறுப்பினர்கள் நேரடியாக சென்று உண்மைகளை அறிந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எமது கட்சித்தலைமைக்கும் முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புக்களும் இத்தேர்தல் மூலமாக உள்ளது,

மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிப்போமானால் நமது தனித்துவமான அரசியல் பணி அபிவிருத்தி பணிகள் என்பன பாரபட்சமாக எமது நிலத்தை பாதுகாக்கமுடியாத சூழல் ஏற்படும் என்பதையும் நாம்புரிநவேண்டும்.

இந்த இலுப்படிச்சேனை சந்திக்கும் வதுளை வீதிக்கும் பலவரலாறுகளும் போர் தியாகங்களும் உண்டு இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மாவீரர்களை எமது விடுதலைக்காக ஆகுதியாக்கியுள்ளோம் ஆனால் அவர்களின் கனவு நனவாகும்வரை தமிழ்மக்கள் உறுதியாகவும் உண்மையாகவும்

சோரம் போகாத சமூகமாகவும் இருந்து தமிழ்தேசியகூட்டமைப்பையும் அதன் தலைவர் சம்மந்தன் ஐயாவின் கரங்களையும் பலப்படுத்தவேண்டும் பலப்படுத்தும் களமாகவே இந்த உள்ளூராட்சிசபை தேர்தலையும் நாம் பயன்படுத்தவேண்டும் அதற்கு எதிர்வரும் பெப்ரவரி 10,ம் திகதி வீட்டுச்சின்னத்திற்கு மட்டுமே எல்லாத்தமிழர்களும் வாக்களக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்த நிகழ்வில் இலங்கைதமிழரசு கட்சி பொதுச்செயலாளர் கி.துரைராச்சிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,எஷ் வியாளேந்திரன் ஜனநாயகபோராளி கட்சி இணைப்பாளர் பிரபாகரன் உட்பட பலரும் உரையாற்றினர்.