சம்பந்தனைக் கவலையடையச் செய்த அந்த நபர்கள் யார்? அதிருப்தியில் எதிர்க் கட்சித் தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைக்காவிட்டால், அரசாங்கத்துக்கு எதிராக அழுத்தம் கொடுக்க பின்னிற்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் வாராந்த ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்துள்ள சம்பந்தன்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டது.

எனினும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில், பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காதுள்ளமை கவலையளிக்கிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர வேறு மாற்றுவழி இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மான அமுலாக்கம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயம் உள்ளிட்டவற்றில், அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியடைய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.