தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணத்திற்கு தோள்கொடுத்த கிராமம்!

கடந்த கால விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணத்திற்கும் தோள்கொடுத்த கிராமம் துறைநீலாவணை என்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் துறைநீலாவணை வட்டாரத்திற்கான வேட்பாளர் க.சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணையில் ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பயணத்திற்கு தோள்கொடுத்த கிராமம் துறைநீலாவணை என கூறியுள்ளார்.

இந்த மண்ணில் கூட்டமைப்பு வரலாறுகாணாத வெற்றியடைந்து, மாற்றுக் கட்சிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது இன்று அந்த நிலை மாறி ஜனநாயகமான தேர்தல் நடைபெறுவுள்ளதாகவும் க.சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.