த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்து வரலாற்று கடமையினை நிறைவேற்ற வேண்டும்

பொதுமக்கள் தமது வரலாற்று கடமையினை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று புதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போதே வேட்பாளர் ஒருவரினால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

அவர் இங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பொதுமக்கள் தமது வரலாற்று கடமையினை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் நிறைவேற்ற வேண்டும்.

ஏனைய பிரதேசங்களுக்கு நிகராக எங்களுடைய பிரதேசங்களையும் அபிவிருத்திசெய்ய வேண்டிய கட்டாயம் எங்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையினை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.