நாங்கள் எதற்கு இணங்கினோம் தெரியுமா? சுமந்திரன்

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்றைய தினம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல என புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனை விட ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது.

இப்படி இருக்க ஒற்றையாட்சிக்கு நாங்கள் இணங்கியதாக ஊடகங்கள் தொடர்ந்தும் பொய்யான தகவல்களை வௌியிடுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால், நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டோம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

பொய் கூறும் ஊடகங்களை பகைத்துதான் தேர்தலில் வெற்றியடைய வேண்டும்.

இல்லை மக்களாக ஊடகங்களை தூக்கி எறியும் நிலை உருவாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.