புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாது! சுமந்திரன் பா.உ

ப்படாமல் அது இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிட்டுவிட்டு, மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி அதிகாரங்களை உபயோகிக்கின்ற நாடு என்ற வர்ணிப்பு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

அதில் சொல்லப்படும் ஒரு குறை ஏக்கிய ராஜ்ஜிய என்று சொல் உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் அது ஆட்சி முறையைக் குறிக்கிற சொல் அல்ல என்பது தெளிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.ஏக்கிய ராஜ்ஜிய என்பது பிரிக்கப்பட முடியாத ஒரு நாடு. அதுதான் அதன் வரைவிலக்கணம் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.

சொல்லப்பட்டது மட்டுமல்லாமல் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவில் எழுதப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏக்கிய ராஜ்ஜிய ஒரு நாடு. அதற்கு நாங்கள் இணங்குகிறோம். ஏன் இணங்குகிறோம்.

சிங்களத்தில் சிங்கள மக்கள் மத்தியிலே சுமந்திரன் சென்று பேச வேண்டும் என்று ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சென்று பேசுவது அவருக்குத் தெரியாது. பல தடவைகள் நான் சென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நாட்டைப் பிரிக்க வேண்டாம் அதிகாரங்களைப் பிரித்துக் கொடுங்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிற எண்ணம் கூட்டாட்சியைக் கொடுத்தால் நாடு பிரிந்து விடும். கூட்டாட்சியைக் கொடுத்தால் நாடு பிரியாது. நாடு பிரியாமல் இருக்க நீங்கள் எதையும் எழுதலாம். அதுதான் நிபந்தனை.

பிரித்துக் கொடுக்கப்படுகின்ற அதிகாரங்கள் முழுமையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் திருப்பி எடுக்கப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும்.அதற்காக புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். அதுதான் கூட்டாட்சி.

அது இடைக்கால அறிக்கையில் கூட இருக்கிறது. பிரதான அறிக்கையில் கூட இருக்கிறது. நான்கே நான்கு பக்கங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

பௌத்த சமயத்துக்கு முதலிடம் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்பினால், மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கொள்கையாக இருந்தாலும் அவர்கள் அதனை விரும்புவார்கள் என்றால், அதற்கு நாங்கள் தயார். ஆனால் எந்த அடிப்படையில் இணங்கத் தயார் என்றால் எந்த சமயத்துக்கோ, நம்பிக்கைக்கோ, நம்பிக்கை இல்லாதவருக்கோ பாரபட்சமாக நாடு இருக்க முடியாது என்ற அடிப்படையிலேயே.

இன்றைக்கு இருக்கின்ற உறுப்புரை ஒன்பது மாற்றி எழுதப்படவேண்டும்.மாற்றி எழுதப்படுகின்ற வாசகமும் இடைக்கால அறிக்கையிலே இருக்கிறது. முதலிடம் என்ற சொல்லைச் சொல்லி விட்டு சில சரித்திர காரணங்களாலேயே, அப்படியான முதலிடம் என்று அவர்கள் விரும்பினால், அது ஏனையோரை பாரபட்சமாக நாடு நடத்த முடியாது என்கின்ற நிலைப்பாட்டுக்கு நாங்கள் வருவோம்.

மிகுதி எல்லா விடயங்களும் நாங்கள் இணங்கக் கூடியதக இருக்கின்ற போது அதை நாங்கள் பரிசீலிக்கத் தயார் என்று சொல்லியிருக்கின்றோம். அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக முழுமையான இணக்கத்தை எமது மக்கள் சார்பில் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்ற போது, நாங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம் என்று சொல்லியிருக்கின்றோம்.

இது பேச்சு மேசையிலேயே செய்யப்பட வேண்டிய விடயம். இது அடித்துப் பறிக்கிற விடயம் அல்ல. பேச்சு மேசையில் போய் பல்வேறு வித்தியாசமான நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் சேர்ந்து அமர்ந்து இருந்து ஒரு இணக்கப்பாட்டை எட்டுகின்ற பொழுது ஒரு தரப்பும் 100 வீதமாக வெல்லமுடியாது. இது எங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பேச்சு மேசையில் விட்டுக்கொடுப்பு இருக்கத்தான் வேண்டும். இதைச் சொல்லுவதற்குப் பயந்து கொண்டிருக்கிறார்கள்.விட்டுக்கொடுத்துத்தானே செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்பு இல்லாமல் வெவ்வேறு நிலைப்பாடுகளில் இருக்கிறவர்கள் இணங்கி வரலாமா? ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு ஒன்று கூட எங்களுடைய அடிப்படையான வேணவாக்களை இல்லாமல் செய்ய முடியாது.

நாங்கள் ஒரே நாட்டில் வாழ்வதற்கு இணங்குகின்றமே அது பெரிய விட்டுக்கொடுப்பு. தனிநாடு கோரிய நாங்கள் ஒரு நாட்டுக்குள் தீர்வுக்கு இணங்கியுள்ளோம். இது விட்டுக்கொடுப்புத்தான். எங்கள் அடிப்படை வேணவாக்களை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. வேறு வேறு விடயங்களில் விட்டுக் கொடுத்திருக்கின்றோம்.

ஆனால் எங்கள் அடிப்படைகளை விட்டுக் கொடுக்கவில்லை. வேறு விடயங்களில் விட்டுக் கொடுத்து முதன்மையானதை நாங்கள் நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். வேறு மாற்றுவழி இருந்தால் எவராவது சொல்லட்டும். இதனை வேண்டாம் என்று விட்டு வந்தால் என்ன செய்வது ? யாரைக் கேட்டாலும் வெளிநாடு செல்லப் போகின்றோம் என்கிறார்கள்.

இது தொடர்பில் வடமராட்சி கிழக்கில் நான் ஆய்வு நடத்தினேன். அங்குள்ள பத்து பேரில் 9 பேர் வெளிநாடு போக விரும்புகின்றோம் என்று சொல்கின்றார்கள்.இப்படியே போனால் 20ஆண்டுகளில் இங்கு இனப் பிரச்சினையே இருக்காது. எங்களுடைய இனமே இருக்காது. வெளிநாட்டில்தான் எங்களுடைய இனம் இருக்கப்போகின்றது.

நாடு கடந்த அரசு மாத்திரம் இருக்கும். அதற்காக தருவதை நாங்கள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் எங்கள் அடிப்படைகளை விட்டுக் கொடுக்கவில்லை என்பதற்கு இடைக்கால அறிக்கை தான் ஆதாரம்.

அது நிறைவேற வேண்டுமானால், இந்த நாட்டில் இருப்பை தக்க வைக்க வேண்டுமானால், தொடர்ச்சியாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் வாழ வேண்டுமாக இருந்தால், சரித்திரத்தில் தமிழர்களுக்கு ஒரு தாயகம் இங்கே இருக்கின்றது. அவர்களும் ஒரு தேசம் இருக்கின்றது.சிங்களவர்கள் மட்டும் இங்கே இருக்கின்ற தேசம் அல்ல. தமிழ் மக்களும் ஒரு தேசம். அவர்கள் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரே நாட்டிலே வாழ்வதற்கு இணங்கிவந்திருக்கிறார்கள் என்று சரித்திரம் எழுதப்பட வேண்டுமாக இருந்தால், இந்த முயற்சி பலிக்க வேண்டும்.

இந்த முயற்சி பலிப்பதற்கு, தமிழ் மக்களுடைய ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதாக காண்பிக்கப்பட வேண்டும்.புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவில் 5பேர் தமிழர்கள். அவர்களில் இருவர், இருமுவதற்கோ, தும்முவதற்கோ வாய் திறக்கவில்லை.

அமைச்சர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இருவரும் வழிநடத்தல் குழுவின் 76 கூட்டங்களில் ஒரு தடவை கூடப் பேசியதில்லை. அமைச்சர் மனோ கணேசன், கூட்டாட்சி, வடக்கு – கிழக்கு இணைப்புப் பற்றி எதுவுமே கதைப்பதில்லை. நானும், சம்பந்தன் ஐயாவும் வடக்கு – கிழக்கு மக்கள் சார்பில் அங்கே பேசினோம்.

பெப்ரவரி 11ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆதரவு சரிந்து விட்டது என்ற செய்தி வந்தால், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான இடைக்கால அறிக்கையை நிறைவேற்றாது போய்விடும்.

இப்போதுள்ள ஆதரவுடனேயே நிறைவேற்ற முடியுமா ? இல்லையா என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்று தான் சொல்வேன். மக்கள் கூட்டமைப்புக்கு கொடுத்த ஆணையிலிருந்து மாறவில்லை என்ற செய்தி வர வேண்டும் – என்றார்.