சம்பந்தன் கலந்து கொள்ளும் விசேட பொதுக் கூட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கம் அளிக்கும் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம், எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பரந்தன் பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் விடயங்கள் குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்புரையாற்றவுள்ளார்.

இதேவேளை, இந்த கூட்டத்திற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராசா தலைமை தாங்கவுள்ளார்.

அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்பட கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.