உங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்! சிறீதரன் எம்.பி எச்சரிக்கை

எம்மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களது உண்மைச்சாயம் விரைவில் வெளிவரும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இதுவரை காலமும் அமைதியாக இருந்தோம்.

இதன் காரணமாகவே எம்மை யார் விமர்சித்தாலும், நாங்கள் அவர்களை விமர்சிக்காமல் இருந்தோம். ஆனால் தற்போது பகிரங்கமாகவே வீதிகளில் எம்மை விமர்சிக்கின்றார்கள்.

இப்படி நீங்கள் செய்யத் தொடங்கினால் உங்களது சாயம் வெளியில் வரும். உங்களது வரலாறுகள் வெளியில் வரும் எனவும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் மஹிந்த இருக்கும் போது மஹிந்தவின் காலுக்கு கீழ் இருந்த அங்கஜன் இராமநாதன், மஹிந்த சென்று தற்போது மைத்திரி வந்ததும் அவருடைய காலில் விழுகின்றார். இதுதான் அவருடைய வாழ்க்கை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.