த.தே.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வவுனியாவில் வெளியீடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு வவுனியா தமிழரசுக்கட்சி அலுவலகமான தாயகத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு கொள்கைப் பிரகடனங்களை உள்ளடக்கிய 15 பக்கங்களை கொண்ட விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

மாவை சேனாதிராஜாவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிடம் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இரா. சம்பந்தனினால் கட்சித்தலைவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், டெலோ அமைப்பின் செயலாளர் க. சிறிகாந்தா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், விந்தன் கனகரட்னம் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.