வவுனியாவில் அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சாள்ஸ் நிர்மலநாதன்

வவுனியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடத்தில் 15 வருடங்களாக சிவசக்தி ஆனந்தன் இருந்தார். இந்த விடயத்தை அறிந்ததும் தாம் அதிர்ச்சியடைந்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பரந்தனில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கூட்டமைப்பிள் மீது குற்றம் சுமத்தும் சிவசக்தி ஆனந்தனுக்கு, ஜீ.எல்.பீரிஸ் ஆதரவாக குரல் கொடுக்கின்றார். உண்மையில் ஜீ.எல்.பீரிஸூக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கும் தொடர்பு இருக்கின்றது.

இதற்கு காரணம், மஹிந்த ராஜபக்ஸவின் முன்னாள் ஆலோசகரே சுரேஸ் பிரமச்சந்திரன், தற்போது மஹிந்தவின் கட்சியில் முக்கியஸ்தர் ஜீ.எல்.பீரிஸ்.

மேலும், வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான விடுதியில் 15 வருடங்களாக சிவசக்தி ஆனந்தன் இருக்கின்றார். அரசாங்கத்திற்கு சொந்தமான அந்த கட்டடத்தில் இவர் எப்படி இருப்பார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்னர் அந்த கட்டடத்தில் ரிசாட் பதியூதின் இருக்கின்றார் என நினைத்து தாம் முறையிட்டதாகவும், இறுதியில் அந்த கட்டடத்தில் இருப்பவர்களில் சிவசக்தி ஆனந்தனும் ஒருவர் என்ற செய்தியை கேட்டு தாம் அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.