ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ஊழலை பகிரங்கமாக பட்டியலிட்ட சுமந்திரன்

சிவசக்தி ஆனந்தன் சொல்லும் பொய்களுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாங்கள் கூறும் உண்மைகளுக்கு கொடுப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நீராவியடியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை இலஞ்சம் என்று புத்தியுள்ள யாரேனும் கூறுவார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசக்தியிடம் ஒருகேள்வி கேட்கின்றேன். வவுனியாவில் இருந்து உளவு வேலை செய்வதற்காக அவருக்கு வீடு ஒன்று கொடுக்கப்பட்டது. அதையே அவர் கட்சி அலுவலகமாக பாவிக்கின்றார்.

அந்த அலுவலகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்த பின்னரே அதை விட்டு செல்கின்றார்.

இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களுக்கு வாக்களித்த இவர் தற்போதுள்ள வரவுசெலவுத்திட்டத்துக்கு வாக்களிக்காமல் எம்மீது குற்றம் சுமத்துகின்றார் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு வீடு கொடுக்கப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சுமந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.