ஜனாதிபதியை சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்துள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் வட மாகாணத்தின் அபிவிருத்திகள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.