சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ள தமிழரசுக் கட்சி!

நிலையில் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக் கூறலுடன் நடந்து கொள்வதனை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 37 வது கூட்டம் தொடர் தொடர்பில் இலங்கை தொடர்பான விடயங்களை முன்வைத்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை ஆணையாளர் செய்யத் ரத் அல் ஹூனைசன்,

இலங்கையில் பொறுப்புக் கூறும் செயற்பாடுகளை ஊக்குவிக்கக் கூடிய வேறு வழிமுறைகளை தேடி அறிய வேண்டும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜனவரி முதல் மனித உரிமை பொறிமுறையை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகமும் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆணையாளர் தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

எனினும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள செயற்படுத்தற்காக ஸ்தாபிக்கப்பட்ட சில கட்டமைப்புகள் போதுமானதல்ல எனவும் அதற்கு போதுமான அரசியல் ஒத்துழைப்புகளும் கிடைக்கவில்லை என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மனிதவுரிமை ஆணையாளரின் கருத்துக்கள் தொடர்பில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முகமாகவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாகவும் அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

அரசாங்கம் வழங்கிய உத்தரவாதங்களிலிருந்து விலகக் கூடாது, நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவுகளை முழுமையாக வரவேற்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்துடன் பயனுறுதிமிக்க, நெருங்கிய அவதானிப்பையும் செலுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் தாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குதல், பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்துள்ளன.

ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மந்த கதியான நடவடிக்கைகள் குறித்தும் நம்பகத்தன்மை குறித்தும் தமிழ் மக்கள் மத்தியில பாரிய கரிசனையைத் தோற்றுவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கமானது பொறுப்புக் கூறலுடன் நடந்து கொள்வதனை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழரசுக் கட்சி கோரியுள்ளது.

இதேவேளை, மனித உரிமை பேரவையின் 37 வது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட் கிழமை ஆரம்பமாகி மார்ச் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.