சிறீதரன் தலைமையில் ஜெனிவாவுக்கு தமிழரசுக் கட்சியின் குழு பயணம்!

நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் குழுவொன்றை அனுப்புவது எனத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டது.

ஜெனிவா கூட்டத்தில் இம்முறை தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என நேற்றைய கூட்டத்தில் கடுமையாக வலியுறுத்தப்பட்டது. இதன் போது ஜெனிவா நிலைமைகள் தொடர்பில் பா.உ சுமந்திரனே அங்கு விளக்கமளித்தார்.

இதன் பின்னர் பா.உ சிவஞானம் சிறீதரன் தலைமையில் குழுவொன்றை இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது.