நேற்று முந்தினம் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்காக மாவட்ட ரீதியாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வவுனியாவுக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கமும், மன்னாருக்கு பா.உ சாள்ஸ் நிர்மலநாதனும், முல்லைத்தீவுக்கு பா.உ சாந்தி சிறீஸ்கந்தராசாவும், மட்டக்களப்புக்கு முன்னாள் பா.உ அரியநேந்திரனும், யாழ்ப்பாணத்திற்கு பிரதேச சபை உறுப்பினர் சுகிர்தன், பெ.கனகசபாபதி ஆகியோரும், கிளிநொச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரித்து மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதற்கான ஒருங்கினைப்பாளராகக் கனடாவில் இருந்து வருகை தந்துள்ள தமிழரசுக்கட்சியின் பிரமுகர் குகதாஸன் செயற்படவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.